15 Dec 2015

இஎஸ்ஐ கார்ப்பரேஷனில் 181 சுருக்கெழுத்தாளர், எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநில  தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழகத்தில்  (ESIC) காலியாக உள்ள 181 சுருக்ககழுத்தாளர், எழுத்தர், மல்டி டெஸ்க் பணியாளர் பணியிடங்களை நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 181

பணி: Stenographer

காலியிடங்கள்: 05

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 103

தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வழங்கப்படும்.

வயது வரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 -27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff

காலியிடங்கள்: 73

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வழங்கப்படும்.

வயது வரம்பு: 06.01.2016 தேதியின்படி  18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apesic.nic.in அல்லது www.esic.nic.in.  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esic.nic.in/backend/writereaddata/recruitment/7c21621de92c46c94a6286b8fc99b13e.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.