10 Dec 2015

பத்தாம் வகுப்பு தகுதிக்கு பிலாய் ஸ்டீல் ஆலையில் பணி


மத்திய அரசு நிறுவனமான பிலாய் ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள சர்வேயர், மைனிங் மேட் உள்ளிட்ட 18 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: சர்வேயர் - 03
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining and Mine‘s Survey பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மைனிங் மேட் - 12
சம்பளம்: மாதம் ரூ. 15,830 - 22,150.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Mate சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி: பிளாஸ்டர் - 03 
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளாஸ்டர் சான்றிதழ் அல்லது மைனிங் மேட் சான்றிதழோடு ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற www.sail.co.in இணையதளத்தை பார்க்கவும்.