17 Mar 2016

தமிழக சிறைத்துறையில் 104 பேருக்கு உதவி ஜெயிலர் வேலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள 104 சிறைச்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண். 6/2016

பணி: Assistant Jailor

காலியிடங்கள்: 104

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் B.A.,B.Sc., B.Com. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

உடற் தகுதி விவரம்:

ஆண்கள்:

உயரம்: 168 செ.மீட்டர்

மார்பளவு: 86 செ.மீட்டர்

பெண்கள்:

உயரம்: 155 செ.மீட்டர்

மார்பளவு: 86 செ.மீட்டர் மற்றும் தெளிவான கண்பார்வையும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்தலாம். நிரந்தர பதிவு எண் இல்லதாவர்கள் பதிவுக்கு ரூ.50 செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.04.2016

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_06_not_eng_asst_jailor.pdf  என்ற லிங்க் செய்து தெரிந்துகொள்ளவும்.