இந்திய தபால் துறையில் தமிழ்நாடு வட்டத்தில் 127 பல்நோக்கு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
பல்நோக்கு பணியாளர்:
127 இடங்கள் (பொது - 88, ஒபிசி - 29, எஸ்சி - 10).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ.
வயது வரம்பு:
27.3.2016 தேதிப்படி 18 முதல் 25க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களிலிருந்து எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் தலா 25 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வு கட்டணம்:
பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.400. விண்ணப்ப கட்டணம் ரூ.100. எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. விண்ணப்ப கட்ட ணத்தை அனைவரும் ஆன்லைனில் செலுத்தவும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 வருடங்கள் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஒரு டிவிசனுக்கு ஒரு யூனிட்டில் உள்ள காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
www.dopchennai.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பின்னர் செல்லான் படிவ நகல் மற்றும் விண்ணப்ப கட்டண ரசீதை கைவசம் வைத்திருக்கவும். தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சான்றிதழ் சரி பார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்: 24.4.2016.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.3.2016.
