அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் மத்திய பிரதேசம், போபாலில் உள்ள உயர்நிலை மூலப் பொருள் மற்றும் செயல்முறை ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகும்.
இலகு ரக உலோகங்களான அலுமினியம், மெக்னீசியம் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்படும் உலோக கலவைகள், நானோ மெட்டீரியல்ஸ், கட்டிட பணிகளுக்கு உபயோகப்படுத்த மாற்று பொருட்களை பயன்படுத்துதல், கழிவுப் பொருள்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது, ஊரக மேம்பாடு ஆகியவற்றில் இந்நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதில் காலியாக உள்ள 8 சயின்டிஸ்ட் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
Scientist Gr.IV (2).
8 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 2, எஸ்சி - 1, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம். மொத்தம்: 66,560.
வயது:
8.4.2016 அன்று 32க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
http://www.ampri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Controller of Administration,
CSIR- Advanced Materials and Processes Research Institute,
(Council of Scientific and Industrial Research),
Hoshangabad Road, Near Habibganj Naka,
BHOPAL- 462026.
Madhya Pradesh.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.4.2016.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 25.4.2016.
