பழமையான தனியார் வணிக வங்கியான நைனிடால் வங்கியில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், தில்லி, அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee
காலியிடங்கள்: 100
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியல், விவசாயம் போன்ற துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திறமை பெற்றிருப்பது அவசியமானவை.
வயதுவரம்பு: 31.03.2016 தேதியின்படி 21 - 27க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது முதல் ஆண்டு மாதம் ரூ.22 ஆயிரமும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.27 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. (திருப்பி அளிக்கப்படாது)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.05.2016
விண்ணப்பிப்பிக்கும் முறை: www.nainitalbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nainitalbank.co.in/pdf/Notification-MT-2016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.