20 Apr 2016

இசை கலை இளைஞர்களுக்கு கடற்படையில் மாலுமி பணி

இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள மாலுமி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இசை பிரிவில் அனுபவம் உள்ள திருமணம் ஆகாத இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: மாலுமி

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.10.1995 க்குப் பின்பும் 30–9–1999 -க்கும் முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். நீண்டகால இசை அனுபவம் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இசை குறித்த அடிப்படைத் திறன் பெற்றிருப்பது அவசியம். அதாவது வெஸ்டன் கிளாசிக்கல், காற்றுக்கருவி மற்றும் தட்டுதல் மூலம் இசைக்கும் கருவிகளை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இசைத் திறன் அடிப்படையிலான ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianavy.gov.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.