25 May 2016

சென்னை துறைமுகத்தில் பொறியாளர் பணி: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை துறைமுகத்தில் துணை தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டமும், பணி அனுபவமும் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: துணை தலைமை மெக்கானிக்கல் பொறியாளர்

காலியிடங்கள்: 06

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், இத்துறையில் 12 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.32,900-58,000

வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief Mechanical Engineer, 
Chennai port trust no 1, 
Rajaji salai, 
Chennai -600001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.chennaiport.gov.in/Careers.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.05.2016