8 Jun 2016

இஸ்ரோ மையத்தில் பணி: 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், நூலக உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 166 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம், நூலக அறிவியல் துறையில் முதகலை பட்டம் மற்றும் செவிலியர் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் திறமைத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து 24.06.2016-ம் தேதிக்குள் சேருமாறு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்