9 Dec 2015

விளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு ரயில்வேயில் பணி


கிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:  E890/2/R&R/Sports (Open Market) 2015-16

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 -25க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதிசள்: ஏதாவதொரு விளையாட்டு விளையாட்டு பிரிவில் தேசிய அளவில், மாநி அளவில், பல்கலைக்கழக அளவில், மண்டல அளவில் நடத்தப்படும் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறி இருக்க வேண்டும். 01.04.2013-க்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் திறமை மற்றும் உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானாவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின்போது சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை  FA & CAO, Eastern Railway, Kolkata என்ற பெயருக்கு டிடி, ஐபிஓ ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் கெஜட்டெட் அதிகாரியால் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.12.2015

பூர்த்தி செய்யப்பட்ட 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chief Personnel Officer, Eastern Railway Headquarters,

Eastern Railway Sports Association (ERSA) Office, 17, Netaji Subhas Road, Fairlie Place, Kolkata - 700001.

மேலும் விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.