12 Jan 2016

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 710 லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 710 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Lab Technician Grade-III) பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 01.02.2016 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்:  1/MRB/2016 தேதி: 10.01.2016

மொத்த காலியிடங்கள்: 710

பணி: LAB TECHNICIAN GRADE-III

சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.02.2016

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் ஆங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 1 வருட மருத்துவ ஆய்வக சான்றிதழ் படிப்பை முடித்து Certificate in Medical Lab Technology Course) முடித்திருக்க வேண்டும்.

நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை திறன் மற்றும் வெளிப்புற பணி செய்யவும் தயாராக உள்ளவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தாலம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.1016

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.02.2016

மேலும் விண்ணப்பிக்கும், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/MRB_Detailed_notification_LT_Grade_III.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.