12 Jan 2016

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி

இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை  நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடங்கள் கேட் 2016 தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி பிரிவுகள்: மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன்

வயது வரம்பு: 01.06.2016 தேதியின்படி 25 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை முழு நேரப் படிப்பாக சம்மந்தப்பட்ட பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பல கட்ட தேர்வுகள் மற்றும் கேட் 2016 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணியின் தன்மை: ஒரு வருட கால பயிற்சியும், பயிற்சிக்கு பின்னப் நிரந்தரப் பணியில் பணியமர்த்தப்படுவர்.

கேட் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2016 முதல் 07.02.2016க்குள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bpclcareers.in/Detailed_ad_GATE_2016_edited.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.