12 Jan 2016

சரஸ்வதி பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பணி

அச்சகத் தொழிலில் நாடு தழுவிய அளவில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள் விவரம்:

பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட்ஸ்

எலக்ட்ரீசியன்ஸ்

மெக்கானிக்ஸ்

வயது வரம்பு: 01.01.2016 தேதயின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்து பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரீசியன் அண்ட் மெக்கானிக்கலில் பிரிவில் ஐ.டி.ஐ., சி.டி.ஐ முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பயிற்சிக் காலம்: 3 வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.7,000

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் முழுமையான பயோ-டேடா படிவத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Managing Director,

Saraswathy Press Limited,

11, B.T. Road, Belgharia,

Kolkata - 700 056.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற http://saraswatypress.com/appoint241215.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.