20 Jan 2016

என்எச்பிசி நிறுவனத்தில் பயிற்சி இன்ஜினியராகலாம்

ஹரியானாவிலுள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் NHPC Limited நிறுவனத்தில் பயிற்சி இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணிவிவரம்:

1.Trainee Engineer (Electrical):

50 இடங்கள் (பொது-40,ஒபிசி-6,எஸ்சி-4).இவற்றில் 9 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பளம்:ரூ.20,600-46,500. தகுதி: எலக்ட்ரிக்கல்
/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் /பவர் சிஸ்டம்ஸ் மற்றும் ஹைவோல்டேஜ் /பவர் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,பட்டம்,

2.Trainee Engineer(Civil):

20 இடங்கள் (பொது-10,ஒபிசி-6,எஸ்சி-4) சம்பளம்:ரூ.20,600-46,500.தகுதி:சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,பட்டம்.

3.Traniee Engineer (Mechanical):

20 இடங்கள் (பொது-10,ஒபிசி-5,எஸ்சி-2,எஸ்டி-3).சம்பளம்:ரூ.20,600-46,500.தகுதி:மெக்கானிக்கல் /புரடக்சன் /தெர்மல் /மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேசன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,

4.Traninee Officer (Geology):

9 இடங்கள் (பொது-5,ஒபிசி-2,எஸ்சி-2).சம்பளம்:ரூ.20,600-46,500.தகுதி:ஜியாலஜி பாடத்தில் எம்எஸ்சி அல்லது Applied Geology பாடத்தில் எம்.டெக்.

வயது:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 1.4.2016 தேதிப்படி 30க்குள் .கேட்-2016 தகுதித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.கேட்-2016க்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தகுதியானவர்கள் www.nhpcindia.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

கேட் தேர்வு நடைபெறும் நாட்கள்:
30.1.2016,31.1.16 மற்றும் 6.2.2016,7.2.2016.

கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்:19.3.2016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:1.2.2016.