21 Jan 2016

பட்டதாரிகளுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில் வேயின் கீழ் இயங்கும் 21 ரயில்வே மண்டலங்களில் மொத்தம் 18 ஆயிரத்து 252 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தென்னக ரயில்வே சென்னை பிரிவில் உள்ள காலி பணியிடங்கள் விவரம் வருமாறு:பணியிடங்கள் விவரம்:


1. கமர்சியல் அப்ரன்டிஸ்:

105 இடங்கள் (பொது-61,எஸ்சி-11,எஸ்டி-8,ஒபிசி-25). இவற்றில் 10 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.9,300-34,800 மற்றும் தரஊதியம் ரூ.4,200.

தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

2. டிராபிக் அப்ரன்டிஸ்:

127 இடங்கள் (பொது-69,எஸ்சி-21,எஸ்டி-9,ஒபிசி-28). இவற்றில் 13 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 4 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

3. குட்ஸ் கார்டு:

182 இடங்கள் (பொது-116,எஸ்சி-32,எஸ்டி-22,ஒபிசி-12). இதில் 19 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

4. ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட்:

80 இடங்கள் (பொது-23,எஸ்சி-28,எஸ்டி-20,ஒபிசி-9). இதில் 8 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதி:

பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

5. சீனியர் கிளார்க்கம் டைப்பிஸ்ட்:

73 இடங்கள் (தென்னக ரயில்வே) (பொது-32,எஸ்சி-13,எஸ்டி-21,ஒபிசி-7). இதில் 9 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதி:

பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

6. சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட்:

3 இடங்கள் (ஐசிஎப்). இந்த 3 இடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

மேற்கண்ட 3 பணிகளுக்கும் ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி:

மேற்கண்ட 2 பணிகளுக்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

7. அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர்:

393 இடங்கள் (பொது-227,எஸ்சி-65,எஸ்டி-42,ஒபிசி-59). இவற்றில் 39 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 11 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனன.

தகுதி: 

ஏதாவது ஒருபட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது வரம்பு1.1.2016 தேதியின் படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயதுவரம்பில் எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை 

ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் எழுத்துத்தேர்வு, (CBT-Examination) மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அக்கவுன்டென்ட் கம் டைப்பிஸ்ட், கிளார்க் கம் டைப்பிஸ்ட் ,டைம்கீப்பர் ஆகிய பணிகளுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு டைப்பிங் தேர்வு நடத்தப்படும். இதில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

டிராபிக் அசிஸ்டென்ட், ஸ்டேஷன் மாஸ்டர் பணிகளுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு அப்டிடியூட் டெஸ்ட் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மொழிகளில் கேட்கப்படும்.

தேர்வு கட்டணம்:

ரூ.100. இதை ஆன்லைன் முறையில் செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பேங்க் செலான் அல்லது இந்தியன் போஸ்டல் ஆர்டராக செலுத்தவும். இந்தர சீதை பத்திரமாக வைத்திருந்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டி.,மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2016.