21 Jan 2016

பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணிகள்


மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் Aeronautical Quality Assurance நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர், கிளார்க், டிரைவர் உள்ளிட்ட 80 குருப்‘சி’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள் விவரம்:

1. Stenographer-GradeII:

மொத்த இடங்கள்: 10.

லக்னோ மண்டலம்: 4 இடங்கள், கொல்கத்தா மண்டலம்: 2 இடங்கள், பெங்களூர் மண்டலம்: 2 இடங்கள், ஐதராபாத் மண்டலம்: 1 இடங்கள், நாசிக் மண்டலம்: 1 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

வயது:

23.1.2016 தேதிப்படி 18 முதல் 27க்குள்.

தகுதி:

பிளஸ்2 தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்தில் 10 நிமிடங்களுக்கு 80 வார்த்தைகள் எழுதும்திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், இந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. Lower Division Clerk(LDC):

மொத்த இடங்கள்: 37.

லகேனா மண்டலம்: 3 இடங்கள், கொல்கத்தா மண்டலம்: 3 இடங்கள், பெங்களூர் மண்டலம்: 9 இடங்கள், ஐதராபாத் மண்டலம்: 9 இடங்கள், நாசிக் மண்டலம்: 6 இடங்கள், ஜபல்பூர் மண்டலம்: 7 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது வரம்பு:

23.1.2016 தேதிப்படி18லிருந்து 27க்குள்.

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. Civilian Motor Transport Driver (Ordinary Grade)(CMTD (OG):

மொத்த இடங்கள்: 6.

லக்னோ மண்டலம்: 1 இடங்கள், ஐதராபாத் மண்டலம்: 1 இடங்கள், நாசிக் மண்டலம்: 4 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது வரம்பு:

23.1.2016 தேதிப்படி18லிருந்து 25க்குள்.

தகுதி: 

10ம்வகுப்பு தேர்ச்சியுடன் கார் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 2 வருட பணி அனுபவம்.

4. MultiTaskingStaff:(MTS):

மொத்த இடங்கள்: 27.

லக்னோ மண்டலம்: 4 இடங்கள், கொல்கத்தா மண்டலம்: 2 இடங்கள், பெங்களூர் மண்டலம்: 9 இடங்கள், ஐதராபாத் மண்டலம்: 1 இடங்கள், நாசிக் மண்டலம்: 6 இடங்கள், ஜபல்பூர்: 5 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது வரம்பு:

23.1.2016 தேதிப்படி18 லிருந்து 25க்குள்.

தகுதி:

10ம்வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பில் எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

மாதிரி விண்ணப்பத்தை www.dgaeroqa.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

1. லக்னோ மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA, DGAQA, Min of Defence, C/OHAL, LUCKNOW, PIN:226016.

2. கொல்கத்தா மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA, DGAQA, Min of Defence, 6, Esplande East, Kolkata-700069.

3. பெங்களூரு மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA, DGAQA, Min of Defence, Vimanapura Post, C/OHAL, Bengalauru-560017.

4. ஐதராபாத் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

RDAQA, DGAQA, Min of Defence, HALPost, Hyderabad-500058.

5. நாசிக் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

DDG, (Nasik), DGAQA, Min of Defence, C/OHAL, Ojhar-422207.

6. ஜபல்பூர் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

CO, AQAW(A), DGAQA, Min of Defence, Khamaria, Jabalpur-482005.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.1.2016.