16 Feb 2016

தமிழகத்தில் மருத்துவத் துறையில் 1091 டெக்னீசியன் பணியிடங்கள்

தமிழகத்தில் மருத்துவத் துறையில் பார்மசிஸ்ட், டார்க்ரூம் அசிஸ்டென்ட், லேப்டெக்னீசியன் உள்ளிட்ட 1091 பணியிடங்களுக்கு மருத்துவ சேவைகள் பணியாளர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. பார்மசிஸ்ட்:

333 இடங்கள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: பார்மசி பாடத்தில் டிப்ளமோ படித்திருப்பதோடு தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்திருக்க வேண்டும். வயது: 01.07.2016 அன்று 18 முதல் 57க்குள்.

2. டார்க்ரூம் அசிஸ் டென்ட்:

234 இடங்கள். சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது கணிதம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் பிரிவில் பிளஸ் 2 மற்றும் டார்க்ரூம் அசிஸ் டென்ட் பயிற்சி படிப்பில் தேர்ச்சி.

டார்க்ரூம் பயிற்சிபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் ரேடியாலஜிக்கல் அசிஸ்டென்ட் சான்றிதழ் படிப்பு படித்தவர்களோ அல்லது ரேடியோ டயாக்னசசிஸ் பாடத்தில் டிப்ளமோ படித்தவர்கள் அல்லது ரேடியோ தெரபி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 1.7.2016 அன்று 18 முதல் 57க்குள்.

3. லேப்டெக்னீசியன் கிரேடு - 2:

524 இடங்கள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: கிங் தடுப்பு மருந்து நிறுவனத்திலோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி படிப்பில் 2 ஆண்டுபடிப்பு அல்லது ஓராண்டு சான்றிதழ் படிப்பு.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500. (எஸ்சி., எஸ்சி - அருந்ததியர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250.) இதை இந்தியன் வங்கியில் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இட ஒதுக்கீடு விவரங்கள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம் வங்கியில்
ஆப்லைனில் செலுத்த கடைசி நாள்:19.2.2016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க,
கட்டணம் செலுத்த கடைசி நாள்:17.2.2016.