15 Feb 2016

இந்தோ திபெத் படையில் கால்நடை மருத்துவர்


இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சர்ஜன் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 


பணி: 

Assistant Surgeon (Assistant Commandant/Veterinary).

13 இடங்கள்.

தகுதி:  

Veterinary Science/Animal Husbandry பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு. கல்வித்தகுதியை Veterinary கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது: 

35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: 

ஆண்கள் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ.,யும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீயும், பெண்கள் 142 செ.மீ., உயரமும் அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி, மருத்துவ சோதனை, உடற்திறன் தகுதி, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது தபால் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தபாலில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்பத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, தேர்ந்தெடுக்கப்படும் முறை ஆகிய விவரங்களுக்கு ITBP இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைன் மற்றும் தபாலில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.2.2016.