1 Feb 2016

இந்திய விமானநிலைய ஆணையத்தில் 200 ஜூனியர் எக்சிக்யூடிவ்ஸ்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் 200 ஜூனியர் எக்சிக்யூடிவ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



பணி: 

Junior Executives (Air Traffic Control):

200 இடங்கள் (பொது-101, ஒபிசி-54, எஸ்சி-30, எஸ்டி-15).

தகுதி:

60% மதிப்பெண்களுடன் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 3 வருட பட்டப்படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ்/டெலி கம்யூனிகேசன்/ தகவல் தொழில்நுட்படம் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,

சம்பளம்: 

16,400-3%-40,500.

வயது: 

9.2.2016 அன்று 27க்குள். எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1000/- இதை ஸ்டேட் வங்கியின் பிரத்தியேக செலானை பதிவிறக்கம் செய்து செலுத்தவும். எஸ்சி., எஸ்டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு, குரல் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கவுகாத்தி, அலகாபாத், அகமதாபாத், ஐதராபாத், நாக்பூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.

www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் முதல் பகுதியை ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.1.2016.

இரண்டாம் பகுதியை விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.2.2016.