17 Feb 2016

மத்திய அரசின் நுண்ணறிவுப் பிரிவில் 69 பணியிடங்கள் தனி உதவியாளராக பணியாற்றலாம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுண்ணறிவுப் பிரிவில் (Intelligence Bureau) தனி உதவியாளர் பணிக்கு 2015-16க்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி:

தனி உதவியாளர். மொத்த காலியிடங்கள்: 69. (பொது - 38, ஒபிசி - 10, எஸ்சி - 13, எஸ்டி - 8).

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

பிளஸ் 2வுடன் ஸ்டெனோகிராபியில் திறமை பெற்றிருக்க வேண்டும். 10 நிமிடங்களில் ஒரு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் வீதம் ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் கூறுவதை (Dictation) சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் 40 நிமிடங்களிலும், இந்தியில் 55 நிமிடங்களிலும் (ஏதேனும் ஒன்றில்) டைப் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் வின்டோஸ், எம்.எஸ் வெர்டு தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

வயது:

20.2.2016 அன்று 18 முதல் 27க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.50. (எஸ்சி., எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது). இதை நுண்ணறிவுப் பிரிவு இணையதளத்திலிருந்து பிரத்யேக செலானை பிரின்ட் அவுட் எடுத்து ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும்.

எழுத்துத் தேர்வு, ஸ்டெனோகிராபி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பொது அறிவு, நியூமெரிக்கல் ஏபிலிட்டி, டெஸ்ட் ஆப் ரீசனிங் ஆகிய பாடங்களில் 80 மதிப்பெண்களுக்கும், ஆங்கிலம் அல்லது இந்தியில் கட்டுரை, பத்தியிலிருந்து பதில் எழுதுதல், பொருள் எழுதுதல், எதிர்பொருள் எழுதுதல், ஒரு வார்த்தை சொல் ஆகியவற்றில் 70 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடைபெறும். அதன் பின்னர் ஆங்கிலம் அல்லது இந்தியில் 50 மதிப்பெண்களுக்கு சுருக்கெழுத்துத் தேர்வு நடைபெறும்.

www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

வங்கியில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.2.2016

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2016.