17 Feb 2016

இந்தோ திபெத் படையில் இன்ஜினியர், டாக்டர் பணிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்தோ திபெத் எல்லை காவல் படையில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் கால்நடை டாக்டர்களுக்கான பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிடங்கள் விவரம்:

1. Assistant Commandant (Engineer).

11 இடங்கள் (பொது - 5, எஸ்சி - 2, எஸ்டி - 2, ஒபிசி - 2).

சம்பளம்: 

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது: 

21.02.16 அன்று 30க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,

உடல் தகுதிகள்: (ஆண்களுக்கும், பெண்களுக்கும்).

உயரம்: ஆண்கள் - 165 செ.மீ., பெண்கள் - 157 செ.மீ.,
மார்பளவு: ஆண்கள் மட்டும் - சாதாரண நிலையில் 81 செ.மீ., விரிவடைந்த நிலையில் - 86 செ.மீ.,

உடல் அளவுகள் அளத்தல், உடல் திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

2. Assistant Surgeon (Assistant Commandant/Veterinary):

13 இடங்கள் (பொது - 4, எஸ்சி - 5, ஒபிசி - 4).

தகுதி: 

Veterinary Science/ Animal Husbandry பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு. Veterinary கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது: 

22.2.2016 அன்று 35க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200. இதை ஆன்லைன் அல்லது ஆப்லைனில் செலுத்தலாம். ஆப்லைனில் செலுத்துபவர்கள் DDO, Dte, Gen.ITB Police Force என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.

ஆன்லைனில் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்.

உடல் தகுதிகள்: (ஆண்களுக்கும், பெண்களுக்கும்).

ஆண்கள் - 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ.யும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ.,யும்,
பெண்கள் - 142 செ.மீ., உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.

உடல்திறன் தேர்வில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை ஆண்கள் 16 வினாடிகளுக்குள்ளும், பெண்கள் 18 வினாடிகளுக்குள்ளும், 800 மீட்டர் தூரத்தை ஆண்கள் 3 நிமிடங்கள் 45 வினாடிகளுக்குள்ளும், பெண்கள் 4 நிமிடங்கள் 45 நொடிகளுக்குள்ளும், நீளம் தாண்டுதலில் ஆண்கள் 3.5 மீட்டரும், பெண்கள் 3 மீட்டரும், குண்டு எறிதலில் ஆண்கள் 4.5 மீட்டர் தூரத்திலும் எறிய வேண்டும். பெண்களுக்கு குண்டு எறிதல் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்.

தபாலில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant (Recruitment), 
Directorate General, 
Indo Tibetan Border Police Force, 
Block-2, CGO Complex, 
Lodhi Road, 
NEWDELHI- 110003.

ஆன்லைன் அல்லது தபாலில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.2.2016.