3 Feb 2016

எம்எஸ்சி, எம்டெக் படித்தவர்களுக்கு கனிமப்பொருள் ஆய்வு கழகத்தில் நிர்வாக பணி

மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கனிமப் பொருள் ஆய்வுக் கழகத்தில் காலியாக உள்ள ‘எக்சிக்யூடிவ் டிரெய்னீஸ்’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி/ எம்.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் விவரம்:

1. Executive Trainee (Geology) (E - 1):

8 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 3, எஸ்சி - 1, எஸ்டி - 1).

தகுதி:

60% தேர்ச்சியுடன் ஜியாலஜி/ அப்ளைடு ஜியாலஜி/ ஜியாலஜி டெக்னாலஜி பாடத் தில் எம்.எஸ் சி/ எம்.டெக்./ எம்.எஸ்சி டெக்.

2. Executive Trainee (Geophysics) (E - 1):

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

தகுதி:

60% தேர்ச்சியுடன் ஜியோபிசிக்ஸ்/ அப்ளைடு ஜியோபிசிக்ஸ் பாடத்தில் எம்.எஸ் சி/ எம்.டெக்./ எம்.எஸ்சி., டெக்.

3. Executive Trainee (Mechanical Engineering) (E - 1):

10 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 3, எஸ்சி - 1, எஸ்டி - 1).

தகுதி: 

60% தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/ பெட்ரோலியம் இன்ஜினியரிங்/ பெட்ரோலியம் டெக்னாலஜி/ அப்ளைடு பெட்ரோலியம் ஆகிய பாடங்களில் பி.இ.,/ பி.டெக்.,

4. Executive Trainee (Petroleum Engineering (E - 1):

8 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1)

தகுதி: 

60% தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/ பெட்ரோலியம் இன்ஜனியரிங்/ பெட்ரோலியம் டெக்னாலஜி/ அப்ளைடு பெட்ரோலியம் இன்ஜினியரிங்/ அப்ளைடு பெட்ரோலியம் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் பி.இ.,/ பி.டெக்.,

மேற்கண்ட 4 பணிகளுக்கும் வயது:

1.1.2016 தேதிப் படி 28க்குள்.

சம்பளம்: 

ரூ.16,400 - 40,500.

www.mecl.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.2.2016.