29 Feb 2016

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேசனரி கிளார்க், அதிகாரி பணி

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேசனரி கிளார்க், அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: Probationary Clerk

தகுதி: பொறியியல் பாடப்பிரிவுகள் தவிர இதரப் பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.02.2016 தேதியின்படி 20 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Probationary Officers

வயதுவரம்பு: 01.02.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.lvbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் 2016 இல் நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய www.lvbank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.