22 Mar 2016

எய்ம்ஸ் மருத்துவமனையில் 251 பேராசிரியர் பணி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்கீழ் போபாலில் செயல்பட்டும் வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி - காலியிடங்கள் விவரம்: 

பணி: பேராசிரியர் - 45

பணி: கூடுதல் பேராசிரியர் - 42

பணி: உதவி பேராசிரியர் - 75

பணி: உதவி பேராசிரியர் - 89

வயது வரம்பு: இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பவர்கள் 50க்குள்ளும், பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 58க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட மருத்துவ துறையில் எம்.டி., எம்.எஸ். படித்தவர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்.சி., எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து போபால் எய்ம்ஸ் மருத்துவமனை முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் கவரில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsbhopal.edu.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.