29 Mar 2016

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் பணி


திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் - கிரேடு-III (தற்கால பணி), அலுவலக உதவியாளர் பணி, இரவு காவலர் மற்றும் மசால்ஜி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி - காலியிடங்கள் விவரம்: 
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III (தற்காலிக பணி)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது சுருக்கெழுத்து தட்டச்சில் தமிழில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது சுருக்கெழுத்து தட்டச்சில் ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி. தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தட்டச்சில் தமிழில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 13
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300


பணி: இரவு காவலர், மசால்ஜி - 01
தகுதி: எழுத்த படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி SCA  பிரிவினர் 18-35க்குள்ளும், SC  பிரிவினர் 18-35க்குள்ளும், ST பிரிவினர் 18-35க்குள்ளும், MBC  பிரிவினர்18-32க்குள்ளும், BC  பிரிவினர் 18-32க்குள்ளும், OC  பிரிவினர் 18-30க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி - 627 002


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Steno%20Typist%20OA%20Masalchi%20Recruitment%20Notification%2022-03-2016_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.