28 Mar 2016

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

அசாம் மாநிலித்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி்க்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்த தகுதியானவர்கள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண். Rectt(Trg) Apprentices/2016-17/pt-III/7

பயிற்சியின் பெயர்: Graduate Engineer Apprentice

காலியிடங்கள்: 05

பயிற்சியின் கால அளவு: 1 ஆண்டு

உதவித்தொகை: 4,984

பயிற்சியின் பெயர்: Diploma Holder in Engineering Technician Apprentice

காலியிடங்கள்: 35

உதவித்தொகை: 3,542

பயிற்சியின் கால அளவு: 1 ஆண்டு

தகுதி: பொறியியல் துறையில் Telecommunication, Electronics, Radio, Computer, Electrical, Instrumentation, Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் பட்டயம் (டிப்ளமோ), பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.assam.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை 
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

DGM(A/HR),
O/o, The CGM Telecom,
BSNL, Assam Telecom Circle,
3rd Floor, BSNL Bhawan,
Panbazar, Guwahati-781 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.assam.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.