கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொறியாளர் பணிக்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை பொறியாளர்
காலியிடங்கள்: 10
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயது வரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500-ஐ Bharat Electronics Limited, Bangalore என்ற பெயருக்கு எஸ்பிஐ வங்கி மூலம் டிடி எடுக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Deputy General Manager,
(HR) Components & EM,
Bharat Electronics Limited,
Jalahalli, Post,
Bangalore -560013
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.