4 Jun 2016

எல்லைக்காவல் படையில் 561 பேருக்கு வேலை ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியத் துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லைக் காவல் படையில் (பி.எஸ்.எப்.) 561 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிகபட்சமாகத் துப்புரவாளர் பணிக்கு 147 பேரும், சமையலர் பணிக்கு 140 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தவிர, டெய்லர்-28, பெயின்டர்-5, சலவைப் பணியாளர்-49, காப்லர்-67, பார்பர்-42, கார்பென்டர்-2, டிராப்ட்ஸ்மேன்-1, வாட்டர் கேரியர்-49, வெயிட்டர்-24, மாலி-1, கோஜ்-6 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

தகுதி:

இந்தியக் குடியுரிமை பெற்ற, 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேற்குறிப்பிட்ட துறைகளில் ஐ.டி.ஐ. படித்து, ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம் அல்லது 2 ஆண்டுக்கால ஐ.டி.ஐ. படிப்பை முடித்தவர் கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பணி அனுபவம் தேவையில்லை.

வயது:

1.8.2016 தேதியில் 18 வயதுக்குக் குறையாமலும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

குறைந்த பட்சம் 167.5 செ.மீ. உயரமும், மார்பளவு 78-83 செ.மீ. அளவிற்குக் குறையாமலும் இருக்க வேண்டும். உடல் அளவுத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், திறமைத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

http://www.bsf.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும்.

புகைப்படங்கள் ஒட்டி, கட்டணச் சான்று மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்திலேயே பார்க்கலாம்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய இறுதி நாள் 21.6.2016.