புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சாலை ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Technician (1):
6 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 3).
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 55% மதிப்பெண்களுடன் Draftsman (Civil) டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்று 2 வருட பணி அனுபவம்.
2. Technician (1):
2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 55% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
27.6.2016 அன்று 28க்குள்.
3. Technical Assistant:
10 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 4, எஸ்டி - 1).
தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணிஅனுபவம்.
4. Technical Assistant:
2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).
தகுதி:
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது:
28க்குள். எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, ஸ்கில்டு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500. இதை ஆன்லைனில் செலுத்தவும் (பெண்கள், எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).
தகுதியானவர்கள் www.crridom.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Controller of Administration,
CSIR - Central Road Research Institute,
(Council of Scientific & Industrial Research)
Delhi-Mathura Road, P.O. CRRI,
NEWDELHI- 110025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.6.2016.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 18.7.2016.