14 Jan 2016

+2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு தேசிய அலுமினிய ஆலையில் பணி

மத்திய அரசின்கீழ் ஒடிசாவில் செயல்பட்டு வரும் National Aluminium Company Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2, டிப்ளமோ முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: M&R/01/2015

பணி: Junior Foreman (Civil) (SO)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.14,600 - 36,500

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mining Mate (TO)

காலியிடங்கள்: 10 (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்)

சம்பளம்: மாதம் ரூ.11,700 - 27,500

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Mining Mate மற்றும் First Aid சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்ற்ருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை National Aluminium Company Limited, Alumina Refinery என்ற பெயரில் Damanjodi-763008, Odisha-வில் மாற்றத்தக்க வகையில் டி,டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nalcoindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.