31 Jan 2016

பிளஸ் 2 கல்வித்தகுதிக்கு டாமன் மற்றும் டையூ யூனியனில் குரூப் சி பணிகள் ஓட்டுநர் உரிமமும் அவசியம்


கோவா அருகே உள்ள டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் தீயணைப்பு மற்றும் அவசர சேவை பிரிவில் 16 டிரைவர் மற்றும் பம்ப் ஆபரேட்டர் (குருப் ‘சி’) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி:

டிரைவர் மற்றும் பம்ப் ஆபரேட்டர். 

16 இடங்கள் (பொது - 11, ஒபிசி - 4, எஸ்டி - 1).

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை இயக்குவதில் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு திறனறி தேர்வு வைக்கப்படும். பிளஸ் 2வில் கம்ப்யூட்டர் அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை படித்திருப்பது விரும்பத்தக்கது.

உடல் தகுதிகள்:

ஷூக்கள் அல்லது பூட்ஸ்கள் அணியாமல் உயரம்: 165 செ.மீ., மார்பளவு (சாதாரண நிலையில்) 79 செ.மீ., விரிவடைந்த நிலையில்: 84 செ.மீ.,

உடல் திறன் 

50 கிலோ எடையுடன் 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும். 4 மீட்டர் உயரத்திற்கு கயிறு ஏற வேண்டும். தூரப் பார்வை திறன் 6/6 என்ற அளவிலும், கிட்டப் பார்வை திறன் 0.5 என்ற அளவிலும் இருக்க வேண்டும். 50 மீட்டர் தூரத்திற்கு நீச்சல் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 6 மாதங்கள் தீத்தடுப்பு பயிற்சியளிக்கப்படும்.

மாதிரி விண்ணப்பத்தை www.daman.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Office of Inspector General of Police/Director of Fire & Emergency Services, 
Daman & Diu, Police Headquarter, 
Dunetha, 
Nani Daman- 396210.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.2.2016.