22 Jan 2016

ராணுவத்தில் அதிகாரியாக NDA தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு


இந்திய ராணுவத்தின் முப்படைகளில் அதிகாரியாக பணியாற்ற ஆசைப்படும் +2 முடித்த, இந்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அதற்குத் தயாராக வேண்டிய தருணம் இது. 

மகாராஷ்டிர மாநிலம், புனேவுக்கு அருகில் உள்ள கதக்வாஸ்லா (Khadakwasla) நகரில் செயல்படும் இந்தியாவின் மதிப்புமிகு கல்வி நிறுவனங்களில் ஒன்றான, ‘நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி’ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் சேர, Union Public Service Commission நடத்தும் NDA நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.    

தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் பயிற்சி தரும் உலகின் தலைசிறந்த ராணுவப் பயிற்சி அமைப்புகளில் ஒன்றான நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி பட்டப் படிப்போடு சேர்த்து ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியையும் வழங்கிவருகிறது.

டெல்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து B.Sc -இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், B.A.,- வரலாறு, பொருளாதாரம், அரசியல், புவியியல், B.Tech போன்ற படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. படிப்பை முடித்து, தரைப்படையைத் தேர்வு செய்வோர், டேராடூனில் உள்ள இந்திய மிலிடரி அகாடமிக்கும், விமானப்படைத் தேர்வு  செய்வோர் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமிக்கும், கடற்படையைத் தேர்வு செய்வோர் கேரளாவில் உள்ள நேவல் அகாடமிக்கும், பயிற்சிக்காக அனுப்பப்படுவர். பயிற்சியை நிறைவு செய்ததும் நேரடியாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.

தரைப்படைப் பிரிவில் 208 இடங்களும், கப்பற்படை பிரிவில் 42 இடங்களும்,
விமானப்படை பிரிவில் 70 இடங்கள் உள்பட மொத்தம் 375 இடங்கள் உள்ளன.

+2வில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றவர்களும், இந்தக் கல்வியாண்டில் தேர்வெழுத உள்ள +2 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

NDA தேர்வை எழுத 2.7.1997 முதல் 1.7.2000 வரை பிறந்த, திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். +2 வில் எந்தப் பிரிவை எடுத்துப் படித்தவர்களும் தரைப்படைப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். விமானப்படை, கப்பற்படைக்கு விண்ணப்பிப்பவர்கள் +2வில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தக் கல்வியாண்டில் தேர்வெழுத உள்ள +2 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.1.2016. 

மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.