22 Jan 2016

NLCயில் 100 எஞ்சினியர்களுக்கு வேலை


என்.எல்.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 100 நிர்வாகப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  


மெக்கானிக்கல் பிரிவில் 50 இடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 20 இடங்கள், சிவில் பிரிவில் 10 இடங்கள், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 5 இடங்கள், மைனிங் பிரிவில் 10 இடங்கள், கம்ப்யூட்டர் பிரிவில்- 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பி.இ, பி.டெக் படிப்புகளில் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினருக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது.

1.12.2015 தேதியின்படி 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த படிவத்தை பிரதியெடுத்து
The General Manager (HR), Recruitment Cell,
 Human Resource Department, 
Neyveli Lignite Corporation Limited,
 Corporate Office, Block-1, NEYVELI- 607 801 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.1.2016.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.1.2016. 

GATE-2016 தேர்வில்பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு மேலுள்ள இணையதளத்தைப் பார்க்கலாம்.