19 Feb 2016

நீங்கள் +2 படித்தவரா? CRPF-ல் ஸ்டெனோகிராபர் வேலை ரெடி

CRPF (Central Reserve Police Force) எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் 78, ஓ.பி.சி. பிரிவில் 75, எஸ்.சி. பிரிவில் 46, எஸ்.டி. பிரிவில் 30 என மொத்தம் 229 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. +2 தேர்ச்சி பெற்ற இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கவும், அதை ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். 1.3.2016 அன்று, 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்கள், குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், பெண்கள் குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் மார்பளவு, சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 77 செ.மீ. ஆகவும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீ. ஆகவும் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் அளவு தேர்வு, ஸ்டெனோகிராபி தேர்வு (ஸ்கில் டெஸ்ட்) நடத்தப்படும். இறுதியில் மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றபிரிவினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

www.crpf.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தில் பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என மூன்று நிலைகள் உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 1.3.2016

விரிவான விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளங்களைப் பார்க்கலாம்.