இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தொழிற்சாலை, கேரள மாநிலம் கொச்சியில் செயல்படுகிறது. அந்த தொழிற்சாலையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் எஞ்சினியர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஸ்டெனோகிராபர் உள்பட 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எஞ்சினியரிங் சார்ந்த பணிகளுக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிரைவர், பெயின்டர், பிட்டர் உள்ளிட்ட வெவ்வேறு பணிகளுக்கும் அந்தந்த வேலைப் பிரிவுகளுக்கேற்ப கல்வித் தகுதிகள் தேவை.அசிஸ்டென்ட் எஞ்சினியர் (மெஷினிஸ்ட்), அக்கவுண்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஃபயர்மேன், செமி ஸ்கில்டு ரிக்கர் ஆகிய பணிகளுக்கு 29.2.2016 தேதியின்படி 40 வயதுக்கு வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்ற அனைத்து பணிகளுக்கும் 29.2.2016 தேதியின்படி 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
படிப்பில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுசெய்த விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து கையொப்பமிட்டு புகைப்படம் ஒட்டி, விவரங்களை நிரப்பி, அத்துடன் விண்ணப்பக் கட்டணமாக கொச்சியில் மாற்றத்தக்க வகையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் COCHIN SHIPYARD LIMITED என்ற பெயருக்கு ரூ.200க்கான டி.டி. எடுத்து இணைத்து The Chief General Manager (HR & Training, Cochin Shipyard Ltd, Kochi - 682015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 29.2.2016.
கொச்சி அலுவலகத்துக்கு விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 5.3.2016.
விரிவான விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.
