20 Feb 2016

ஐ.டி.ஐ படிப்புக்கு துணை ராணுவத்தில் வேலை

மத்திய அரசின் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றான எஸ்.எஸ்.பி எனப்படும் சஷாஸ்திரா சீமா பால்.




வேலை: 
ஃபார்மசிஸ்ட், காப்ளர், ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் போன்ற 13 பிரிவுகளில் சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பதவிகளிலான வேலை

காலியிடங்கள்: 

மொத்தம் 143

கல்வித் தகுதி: 

சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியிலான துணை மருத்துவ வேலைகளுக்கு ப்ளஸ் டூ படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்திருப்பதுடன் இந்தத் துறைகளில் டிப்ளமா படிப்பும் படித்திருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பதவியிலான வேலைகளுக்கு பத்தாவது படிப்புடன் அந்தந்த வேலை பிரிவுகள் தொடர்பாக ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 

வேலைப் பிரிவுக்கு ஏற்ப தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: 

உடல் திறன் சோதனை, எழுத்து, தொழில் திறன் சோதனை, மற்றும் மருத்துவ சோதனைகள் உண்டு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 22.2.16

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.ssb.nic.in