4 Feb 2016

இந்திய ராணுவத்தில் 480 காலியிடங்கள் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல பொறியியல் அலுவலகத்தில் (Military Engineering Services Eastern Command) காலியாக உள்ள குருப் சி பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: 

Tradesman Mate (Group C Posts):

480 காலியிடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200.

வயது வரம்பு:

18 முதல் 27க்குள்.

வயது வரம்பு

13.2.2016 தேதிப்படி கணக்கிடப்படும்.

தொழிற்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. Mate (Electrician):

156 இடங்கள் (டின்ஜன் மையம்-14, ஷில்லாங் மையம்-60, ஜோர்காட் மையம்-34, போர்ஜகர் மையம்-23, தேஸ்பூர் மையம்-25).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician/Broad  Based Basic Training Electric/ Mechanical Auto Electrical/Electronoics பிரிவில் ஐடிஐ

2. Mate (Refrigerator Mechanic & Air Conditioning):

42 இடங்கள் (டின்ஜன்-6, ஜோர்காட்-19, போர்ஜகர்-5, தேஸ்பூர்-12).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Refrigeration and Air Conditioning பிரிவில் ஐடிஐ.

3. Mate (Fitter General Mechanic).

148 இடங்கள் (டின்ஜன்-15,ஷில்லாங்-82, ஜோர்காட்-9, போர்ஜகர்-22, தேஸ்பூர்-20).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter General Mechanic/Fitter/Fitter General பிரிவில் ஐடிஐ சான்றிதழ்.

4. Mate (Vehicle Mechanic).

12 இடங்கள் (டின்ஜன்-4, ஜோர்காட்-4, போர்ஜகர்-1, தேஸ்பூர்-3).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Vehicle Mechanic/Mechanic Diesel/ Mechanic Repair & Maintenance of Light Vehicles/Driver Cum Mechanic Light Vehicles/Automobilses பிரிவில் ஐடிஐ சான்றிதழ்.

5. Mate (Pipe Fitter):

58 இடங்கள். (டின்ஜன்-5, ஷி்ல்லாங்-32, ஜோர்காட்-9, தேஸ்பூர்-12).தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Pipe Fitter/Plumber/Sanitary Hardware பிரிவில் ஐடிஐ சான்றிதழ்.

6. Mate (Carpenter).

37 இடங்கள் (டின்ஜன்-3, ஷில்லாங்-8, ஜோர்காட்-9, போர்ஜகர்-9, தேஸ்பூர்-8).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கார்பென்டர் பிரிவில் ஐடிஐ.

7. Mate (Painter):

4 இடங்கள் (டின்ஜன்-4).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பெயின்டர் ஜெனரல் பிரிவில் ஐடிஐ சான்றிதழ்.

8. Mate (Mason):

23 இடங்கள் (டின்ஜன்-6, ஷில்லாங்-12, போர்ஜகர்-5).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Mason பிரிவில் ஐடிஐ சான்றிதழ். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் தொழிற் திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

www.mes.gov.in என்ற இணையதளம் மூலம் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

விண்ணப்பதாரர்கள் எந்த தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த மையத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 13.2.2016.