5 Feb 2016

தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலில் 70 கிளார்க் இடங்கள்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 70 லோயர் டிவிசன் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: 

லோயர் டிவிசன் கிளார்க்.

70 இடங்கள்.

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் ரூ.1,900.

வயது வரம்பு: 

1.1.2016 தேதிப்படி 18 லிருந்து 27க்குள்.

கல்வித்தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு மூலம் தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவர்.

General knowledge/General English/Written Expression பிரிவுகளில் இருந்து மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் எழுத்துத்தேர்வு நடைபெறும். கேள்விகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் கேட்கப்படும். புதுடெல்லி, ஆஜ்மீர், போபால், புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங் ஆகிய மையங்களில் இந்த ஆண்டு மே/ஜூனில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.200/- இதை Secretary, NCERT என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.

www.ncert.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.2.2016.

தபால் மூலம் விண்ணப்பம் சென்று சேர கடைசி நாள்: 22.2.2016.