4 Feb 2016

மின்பகிர்மான கழகத்தில் அதிகாரிகள்

இந்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்டில் துணை மேலாளர், கம்பெனி செயலர் உள்ளிட்ட 17 பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. துணை மேலாளர் (நிதி மற்றும் கணக்கியல்):

15 இடங்கள்.

தகுதி:

சிஏ/சிஎம்ஏ (ஐசிடபிள்யூஏ) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்.எஸ். ஆபீஸ் மற்றும் விண்டோஸ் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.பணி அனுபவம்:

பட்டப்படிப்பை முடித்த பின்பு Executive/Gazetted Officer Cadre ஆக 9 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

12.2.2016 தேதிப்படி 39க்குள்.

சம்பளம்:

ரூ.32,900-58,000.

2. கம்பெனி செயலர்:

2 இடங்கள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சிஏ/ஐசிடபிள்யூஏ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

பட்டப்படிப்பை முடித்த பின்பு Executive/Gazetted Officer Cadre ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

12.2.2016 தேதிப்படி 33க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

வயது வரம்பு:

ஒபிசியினருக்கு 3 வருடங்களும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவு வாரியாக 5 வருடங்கள் மற்றும் அதற்கு மேலும் சலுகை வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகைகள் வழங்கப்படும். நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.400/- இதை Power Grid Corporation of India என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Advertiser, 
Post Box.No:9248, 
Krishna Nagar Head Post Office, 
NEWDELHI- 110001.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2016.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 27.02.2016.