15 Feb 2016

மின்பகிர்மான கழகத்தில் பி.இ. படித்தவர்களுக்கு வேலை

மின்பகிர்மான கழகத்தில் (Power grid) எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இன்ஜினியரிங் துறைகளில் காலியாக உள்ள 162 எக்சிக்யூட்டிவ் டிரெய்னீஸ் இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் விவரம்: 

Executive Trainees:

162 பணியிடங்கள்

1. எலக்ட்ரிக்கல் துறை:

138 பணியிடங்கள்.

2. எலக்ட்ரானிக்ஸ் துறை:

15 இடங்கள்.

3. சிவில் துறை:

6 இடங்கள்.

4. கம்ப்யூட்டர் சயின்ஸ்:

5 இடங்கள்.

கல்வித்தகுதி: 

எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் (பவர்)/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/பவர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங்/பவர் இன்ஜினியரிங் (எலக்ட்ரிக்கல்)/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன்/சிவில் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ இன்பர்மேசன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் 65% மதிப்பெண்களுடன் பி.இ./பி.டெக் பட்டம் அல்லது 65% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/சிவில்/கம்பயூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஏஎம்ஐஇ.

கேட்-2016 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கேட்-2016 தேர்வின் மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கேட்-2016 அட்மிட் அட்டை, அசல் மதிப்பெண் அட்டை, புகைப்பட அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றிதழ்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கேட்-2016 பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள https://appsgate.iiscernet.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் போது கேட் பதிவு எண்ணை ஆன்லைன் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.2.2016.