9 Feb 2016

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு தேசிய பால் வள ஆராய்ச்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு

ஹரியானா அருகே கர்னலில் உள்ள தேசிய பால் வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் பெங்களூர், கல்யாணி ஆகிய இடங்களில் காலியாக உள்ள 56 டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள் விவரம்:

1. Technician (Workshop):

8 இடங்கள் (பொது - 7, ஒபிசி - 1). இதில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சி.

2. Technical Assistant: (Field Farm):

6 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 1).

தகுதி:

Veterinary Science/ Veterinary Science & Animal Husbandry பிரிவுகளில் இளங்கலைப் பட்டம்.

3. Technical Assistant (Field Farm):

8 இடங்கள் (பொது - 4, எஸ்சி - 1, எஸ்டி - 2, ஒபிசி - 1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதி:

வேளாண்மை/ விலங்குகள் பாதுகாப்பு மற்றும் பால்வளம் ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டம்.

4. Technical Assistant (Field Farm):

5 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 2).

தகுதி: 

பண்ணை அறிவியல்/ பண்ணை தொழில்நுட்பம்/ உணவு அறிவியல்/ உணவு தொழில்நுட்பம்/ உணவு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டம்.

5. Technical Assistant (Lab Technician):

8 இடங்கள். (பொது - 4, ஒபிசி - 1, எஸ்சி - 2, எஸ்டி - 1).

தகுதி: 

வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பி.எஸ்சி.,

6. Technical Assistant (Laboratory Technician):5 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1).

தகுதி: 

Genetics/ Microbiology/ Biochemistry/ Bio Technology பாடப் பிரிவுகளில் இளங்கலை பட்டம்.

7. Technical Assistant: (Laboratory Technician):

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

தகுதி: 

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பி.டெக்./ பிஎஸ்சி அல்லது பிசிஏ.

8. Technical Assistant (Workshop):

3 இடங்கள் (பொது).

தகுதி: 

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது 3 ஆண்டு டிப்ளமோ.

9. Technical Assistant (Workshop):

4 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1, எஸ்சி - 1, எஸ்டி - 1).

தகுதி: 

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ. அல்லது 3 வருட டிப்ளமோ.

10. Technical Assistant:

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

தகுதி: 

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது 3 வருட டிப்ளமோ.

11. Technical Assistant:

4 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 1).

தகுதி: 

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ., அல்லது 3 வருட டிப்ளமோ.

வயது வரம்பு: 

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 30க்குள். எஸ்சி., எஸ்டி., ஒபிசியினருக்கு அரசு விதிப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்:

ரூ.100. இதை ICAR-UNIT-NDRI என்ற பெயரில் கர்னலில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

www.ndri.res.in என்ற இணையதளம் மூலம் மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Joint Director (Admn.,) & Registrar,
National Dairy Research Institute,
KARNAL- 132001,
HARYANA.

விண்ணப்பம் சென்று சேர கடைசி நாள்: 16.2.2016.