9 Feb 2016

சட்டம் படித்தவர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றலாம்


இந்திய ராணுவத்தில் ஜட்ஜ்மென்ட் அட்வகேட் ஜெனரல் துறையில் பணியில் சேர ஷார்ட் சர்வீஸ் கமிஷன் ஜேக் நுழைவுத் திட்டம் 17வது கோர்சுக்கு பி.எல். படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடங்கள்:

14. ஆண்கள் - 10. பெண்கள் - 4.

வயது: 

1.7.2016 அன்று 21 முதல் 27க்குள். (விண்ணப்பதாரர்கள் 1989 ஜூலை 2ம் தேதிக்கு முன்னரோ, 1995 ஜூலை 1ம் தேதி பின்னரோ பிறந்திருக்கக் கூடாது).

கல்வித் தகுதி:

பட்டப் படிப்புக்கு பின்னர் 55 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 ஆண்டு எல்எல்பி பட்டம் அல்லது பிளஸ் 2க்கு பின்னர் 55 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 5 ஆண்டு எல்எல்பி பட்டம்.

இந்திய அல்லது மாநில பார்கவுன்சிலில் பதிவு செய்யும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் படிக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் பார்கவுன்சிலால் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். உளவியல் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெயினிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் போது ரூ.21 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

பயிற்சிக்குப் பின் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பிரிவில் லெப்டினென்ட் அந்தஸ்தில் நியமிக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வின் போது பிரின்ட் அவுட்டுடன் சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.2.2016.