அகில இந்திய அளவில் கல்லூரி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வு 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி நடத்தப்படும் தேசிய தகுதி தேர்வுக்கு (NET) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி:
Junior Research Fellowship or Lectureship. எம்.எஸ்சி முடித்தவர்களோ அல்லது எம்எஸ்சி இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேசிய தகுதித் தேர்வு (National Eligible Test)க்கான பாடங்கள் விவரம்:
1. Chemical Sciences
2. Earth, Atmospheric, Ocean and Planetary Sciences
3. Life Sciences
4. Mathematical Sciences
5. Physical Sciences.
கல்வித் தகுதி:
55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் எம்.எஸ்சி அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி/ ஒருங்கிணைந்த பிஎஸ்-எம்எஸ்/ பி.இ.,/ பி.டெக்/ பி. பார்மா/ எம்பிபிஎஸ் பட்டம் (எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது)
ஜூனியர் பெல்லோஷிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்சி., முதலாண்டு படிக்கும் போதே விண்ணப்பிக்கலாம். அவர்கள் தேர்வு முடிவுகள் காத்திருப்பு பிரிவில் வைக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 ஆண்டுகளுக்குள் எம்.எஸ்சி முடித்த பின்னர் ஜூனியர் பெல்லோஷிப் பில்பி.எச்டிக்கு சேரலாம்.
அ. ஜூனியர் பெல்லோஷிப்புக்கு
வயது:
1.1.2016 அன்று 28க்குள். (எஸ்சி., எஸ்டியினர், ஒபிசியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்த்தப்படும்).
ஆ. பேராசிரியர் பணிக்கு:
வயது:
அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.1,000. ஒபிசியினருக்கு (பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு) ரூ.500. எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதை RTGS முறையிலோ NEFT முறையிலோ இந்தியன் வங்கி மூலம் செலுத்தலாம்.
தமிழ்நாட்டில் தேசிய தகுதித் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
www.csirhrdg.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட்டை சாதாரண தபாலில் அனுப்பவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy Secretary (Exam),
Human Resource Development Group,
Examination Unit
CSIR Complex, Library Avenue,
PUSA,
NEWDELHI - 110012.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.3.2016.
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 29.2.2016.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 7.3.2016.
