21 Feb 2016

அணுத்துகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகள்!

நிறுவனம்: 
மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் ஹைதராபாத்தில் இயங்கி வரும் அட்டாமிக் மினரல்ஸ் டைரக்டரேட் ஃபார் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் ரிசர்ச் எனும் அணுசக்தித் தாது ஆராய்ச்சிக் கழகம்.


வேலை: 

டெக்னிக்கல் ஆபீஸர் (பல்வேறு துறைகள்), சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் (பல்வேறு துறைகள்), டிராஃட்ஸ்மென், டெக்னீஷியன் (பல்வேறு துறைகள்), ஸ்டெனோ (சில துறைகள்), அப்பர் டிவிஷன் க்ளர்க், டிரைவர், ஒர்க் அசிஸ்டென்ட் மற்றும் செக்யூரிட்டி கார்டு எனும் அடிப்படை பிரிவுகளில் மொத்தம் 24 துறைகளில் வேலைகள்.

காலியிடங்கள்: 

மொத்தம் 146

கல்வித் தகுதி: 

எம்.எஸ்சி இயற்பியல், கம்ப்யூட்டர், வேதியல் படித்தவர்கள் மற்றும் பி.இ, பி.டெக் படித்தவர்கள் டெக்னிக்கல் ஆபீஸர் மற்றும் சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்து ஐ.டி.ஐ படித்தவர்கள் டெக்னீஷியன், டிராஃப்ட்ஸ்மென், ஸ்டெனோ வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். டிகிரியில் சயின்ஸ் படித்தவர்கள் அப்பர் டிவிஷன் க்ளர்க் வேலைக்கும், டிரைவர், ஒர்க் அசிஸ்டென்ட் மற்றும் செக்யூரிட்டி கார்டு வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் போதுமானது.

வயது வரம்பு: 

வேலை பிரிவுகளைப் பொறுத்து குறைந்தபட்ச வயது 18 முதல் 30 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முறை: 

உடல் திறன் சோதனை, எழுத்து, ஸ்டெனோ தேர்வு, பயிற்சித் தேர்வு, தொழில் திறன் தேர்வு, மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.2.16

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.amd.gov.in