31 May 2016

ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 196 பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை  நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 196 Field Operator பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

பணி: Field Operator: 


1. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள காலியிடங்கள்: 121 (பொது - 63,  ஒபிசி - 45, எஸ்சி - 8, எஸ்டி - 5).

2. உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காலியிடங்கள்: 45 (பொது - 23, ஒபிசி - 18, எஸ்சி - 2, எஸ்டி - 2).

3. மகாராஷ்டிராவில் உள்ள இடங்கள்: 23 (பொது - 13, ஒபிசி - 6, எஸ்சி - 2,
எஸ்டி - 2).

4. மேற்குவங்கத்தில் உள்ள இடங்கள்: 7 (ஒபிசி - 4, எஸ்சி - 3).

கல்வித்தகுதி:  

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது பிளஸ்2 தேர்ச்சியுடன் Attendant Operator (Chemical Plant), Electronics, Electronics Mechanic, Electrician, Electrical, Instrument Mechanic (Chemical Plant), Instrumentation, Instrument Mechanic, Mechanic Industrial Electronics, Maintenance Mechanic (chemical plant), Mechanical, Mechanical Equipment, Mechanic Mechatronics, Mechanic Industrial Electronics ஆகிய  தொழிற்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பொது மற்றும் ஒபிசியினர் ஐடிஐ படிப்பில் குறைந்தது 70% மதிப்பெண்களும், எஸ்சி., எஸ்டியினர் 65% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:  

ரூ.9,250 - 20,000.

வயது வரம்பு: 

1.6.2016 தேதியின்படி 18 முதல் 23க்குள்.

எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஒபிசியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழிற்திறமை, உடல் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.bharatpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத்தேர்வுக்கு வரும் போது பிரின்ட் அவுட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.6.2016.