24 May 2016

RITES நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Technical Assitant  பணிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Technical Assistant (Electrical)

பதவி எண்: 30/16

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.10,300

வயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 31-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical & Electronics பிரிவுகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2016

விண்ணப்பிக்கும் முறை: http://ritesltd.com/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண் அவுட் எடுத்து அதனுடன் சான்றிகழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Manager (P)/ Rectt., RITES Limited, 
RITES Bhawan, 
Plot No: 1, Sector-29, 
Gurgaon-122 001, 
Haryana.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.06.2016